பிரதான செய்திகள்விளையாட்டு

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பேரில் விளையாட்டு அதிகாரிகள் பார்வை

(MSM றிஸ்மீன்)

ஒட்டமாவடி  அமீர் அலி விளையாட்டு மைதானத்தை ஐந்து மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக சுற்று வேலியும்  , மலசலகூடமும் அமைப்பதற்கான மாதிரி அறிக்கை பெறுவதற்காக  பிரதி அமைச்சரின்  அழைப்பின் பேரில்  விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் வருகைதந்தனர்.

மேலும் இவ்விளையாட்டு மைதானத்தை 400 மீற்றர் ஒடுபாதையும் மற்றும் உள்ளக விளையாட்டு அரங்கினையும் அமைப்பதற்கான ஏற்பாட்டினை பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விளையாட்டு அமைச்சின் பிரதம பொறியியாளர் கொட கும்புர  , அமைச்சரின் பிரத்தியேகச்  செயலாளர்  எஸ். எம்.  தெளபீக் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டம் பணிப்பாளர் றுவைத்,   மற்றும்  அமைச்சின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.46809ac4-2690-46b6-be2e-94a2ce1c3c25

Related posts

ஞானசார தேரர் நீதி மன்றத்தில் கலகத்தை ஏற்படுத்திய விடயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

wpengine

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகர சற்றுமுன் சரண்

wpengine

“வட்ஆப்“ பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் தகவல்

wpengine