பிரதான செய்திகள்

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையில்

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று(14) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் வசதியின் கீழ், டீசல் கொண்டுவரப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். பெர்னாண்டோ தெரிவித்தார்.

Related posts

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine

வில்பத்து பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும்- ஷிப்லி பாறுக்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது: பெப்ரல் அமைப்பு கண்டனம்

wpengine