பிரதான செய்திகள்

400 பொலிஸ் நிலையங்கள்! ஆயுதமற்ற ஞானசார தேரரை ஏன் கைது செய்ய முடியவில்லை?

பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு அரசாங்கத்தால் இதுவரை முடியாது போயுள்ளதாக இடதுசாரி மையத்தின் இணை இணைப்பாளர் சமீர பெரேரா கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் 400 இற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் இருந்த போதிலும், ஆயுதமில்லாத நபர் ஒருவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், பொலிஸார் தொழிலாளர்களிடம் காட்டும் எதிர்ப்பை அடிப்படைவாதிகளிடம் ஏன் காட்டுவதில்லை என்பது குறித்து தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனவரி 08ம் திகதி மக்கள் எதிர்பார்த்த அரசியலை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கையை உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்று சமீர பெரேரா கூறியுள்ளார்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை மீண்டும் ஏற்படுத்த முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பதாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று செயற்பட்ட விதம் குறித்த தமது நிலைப்பாட்டை வௌியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

பேஸ்புக்கின் ஊடாக புதுவருட வாழ்த்துகள் தெரிவித்த மஹிந்த (விடியோ)

wpengine

யாழ். போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்!

Editor

இணக்க சபை வெற்றிடம்! நிரப்ப நீதி அமைச்சு திட்டம்

wpengine