பிரதான செய்திகள்

400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) தீர்மானித்துள்ளனர்.

உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலை 790 ரூபாவாகும்.

இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி – 8 பதக்கங்களுடன் சாதனை படைத்த இலங்கை!

Maash

இன்று இப்தாருக்கு வாருங்கள்! நாளை ஞானசார தேரர் கைதாவார்!!

wpengine

முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

wpengine