மக்கள் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கமானது எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்த நாட்டின் வாழும் 40 வயதுக்கு அதிகமான ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு வருடத்திற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு என குறிப்பிட்ட காலப்பகுதியைத் தெரிவு செய்து அக்காலப் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு வாய்ப்பு அளிப்பதாகும்.
அதனால் அடையாளம் காணப்படும் நோய் நிலைமைக்கு அவசியமான சிகிச்சை சேவைகளை வழங்குவதும், அதனுடன் தொடர்புடைய நீண்ட காலத் திட்டம் ஒன்றை தற்போதைய அரசாங்கத்தின் தேசிய கொள்கையில் இணைத்துள்ளதுடன் தற்போது சுகாதார அமைச்சின் ஊடாக அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீண்ட காலத் திட்டத்தில் குறுங்கால செயல்பாடாக “சுப உதான” நடமாடும் சுகாதார கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்தக் கூடியதாக இருப்பதாகவும் சுகாதார மற்றும் ஊடகப் பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி குறிப்பிட்டார்.
கிராமிய மக்களுக்கு சுவசெத வழங்கும் சுவ உதான ஐந்தாவது நடமாடும் சுகாதார கிளினிக் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த வருடத்தில் ஐந்தாவது நடமாடும் சுகாதார கிளினிக் திட்டமாக இது காணப்படுவதுடன் அது அண்மையில் கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிலிமதலாவ ரணவன புராண விகாரையில் நாள் முழுவதும் இடம்பெற்றது.
நாட்டில் வாழும் பிரஜைக்கு ஏதேனும் நோய் ஏற்படுவதற்கு முன்னர் அதனை தடுத்தல், நோய் ஏற்பட்டிருந்தால் அதனை மேலும் பரவ விடாது தவிர்த்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சின் முழுமையான அவதானத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பிரதி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி, அதற்கு அவசியமான மனித மற்றும் பௌதீக வளங்கள் போன்ற அவசியமான வசதிகளை வழங்கி, அந்த சிகிச்சை பிரிவை வலுப்படுத்துதல் தொடர்பாக சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.