பாரியளவிலான நான்கு குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
போதைப்பொருள், திட்டமிடப்பட்ட குற்றங்கள், பாரியளவிலான சுற்று சூழல் அழிப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் ஆகிய 4 வகையான குற்றங்களை இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.