Breaking
Thu. Nov 21st, 2024

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதவி நீக்கப்பட்டது தவறு என்று நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளைக்கு அமைவான 4 மாதங்களுக்குரிய சம்பளம், முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்டுள்ளது.


வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அமைச்சரவையிலிருந்து அமைச்சர் டெனீஸ்வரனை 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி பதவி விலக்குவதாக அறிவித்திருந்தார்.

அதற்கு எதிராக டெனீஸ்வரன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை வழங்கியது. அவரது பதவி நீக்கம் தவறு என்று கூறியது. இந்த வழக்கு மீதான தீர்ப்பு கடந்த ஆண்டு இறுதியில் வழங்கப்பட்டது.

இடைக்காலக் கட்டளையை உறுதிப்படுத்தியிருந்தது.
நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலக் கட்டளைக்கு அமைவாக தனது சம்பளத்தை வழங்குமாறு டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபையைக் கோரியிருந்தார். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டது.

சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையிலிருந்து மாகாண சபை கலைக்கப்படும் வரையிலான 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையிலான 4 மாதங்களுக்குரிய சம்பளத்தை வழங்க சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

நான்கு மாதங்களுக்கும் 7 இலட்சத்து 21 ஆயிரத்து 797 ரூபா 27 சதம் அவருக்கு வழங்கபடப் வேண்டியிருந்தது. டெனீஸ்வரன் அமைச்சரவையிலிருந்து விலகியபோது கைத்தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை ஒப்படைக்கவில்லை.

அதற்குரிய பெறுமதியை வழங்குவதாக டெனீஸ்வரன் தெரிவித்தமைக்கு அமைவாக ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 950 ரூபா கழிக்கப்பட்டு எஞ்சிய 5 லட்சத்து 23 ஆயிரத்து 847 ரூபா 27 சதம் அவரின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய மாதங்களுக்கான கொடுப்பனவைக் கோரி மாகாண சபைக்கு விண்ணப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன், தனது ஆளணியினருக்கான கொடுப்பனவையும் கோரவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனது அமைச்சுப் பதவியை பகிர்ந்து கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் அமைச்சர் க.சிவநேசன் ஆகியோரிடமிருந்து அந்தப் பணத்தை மாகாண சபை மீள அறவிடவேண்டும் என்றும் டெனீஸ்வரன் வலியுறுத்தினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *