பிரதான செய்திகள்

4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றம்

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.

தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக காலி, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது.

கடந்த பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக குறைவடைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் இருந்து கடந்த பொது தேர்தலில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது.

இதேபோன்று பதுளை மாவட்டத்தில் கடந்த முறை 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் இருந்து கடந்த முறை 5 உறுப்பினர்னகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக இம்முறை ஆக கூடுதலான உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த எண்ணிக்கை 19 ஆகும்.

Related posts

இப்ராஹிம் மீது முஸ்லிம் காங்கிரஸ் தவம் விமர்சனம்! பொலிஸ் முறைப்பாடு

wpengine

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவது! சுதந்திரத்தை அடக்கும் செயல்

wpengine

Islamic Relief based London INGO help 1,100 families in Kolannawa, Welampitiya

wpengine