பிரதான செய்திகள்

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

ஹொரனை வைத்தியசாலை வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

குருந்துவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான நாலிக்கா பிரியதர்ஷனி என்பவரே 3 பிள்ளைகளை பெற்றுள்ளார். குழந்தை மற்றும் தாய் தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளனர்.

பிறந்த குழந்தைகள் 2.150, 1.900, 1.685 கிலோ கிராம் எடை கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த குழந்தைகளை வளர்ப்பதில் இளம் தம்பதியினர் பெரும் சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குழந்தைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தம்பதியருக்கு 4 வயதில் ஒரு பெண் குந்தை உள்ள நிலையில், தற்போது 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

பெரிய வருமானம் இன்றி இந்த குழந்தைகளை வளர்ப்பது எப்படி என தெரியவில்லை. விரும்புவோர் தங்களுக்கு உதவுமாறு குழந்தைகளின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு- 2016 இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கினறது.

wpengine

அடுத்த வாரம் தபால் வாக்களிப்பு

wpengine

 6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள அரசாங்கம்.

Maash