பிரதான செய்திகள்

3,772 பேர் வீடுகளுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கை

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேர் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நியமனக் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ். சுபோதிகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமன கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படுவார்கள்.

Related posts

வவுனியா தேவாலயமொன்றிலிருந்து முஸ்லிம் இளைஞர் கைது!

Editor

ஊரடங்கு சட்டம் தனியாக தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை

wpengine

நான்கு குழந்தையின் தாய் கிசுகிசுக்கள் கணவருக்கு விவாகரத்து கடிதம்

wpengine