அரசியல்வவுனியா

உலமா சபை, சாளம்பைக்குளம் கிளை – முத்து முஹம்மட் எம்.பி சந்திப்பு! Vavuniya News Muthu Mohammed MP

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாளம்பைக்குளம் பிரதேசக் கிளைக்கும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலில், பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் S.M.அப்துல் மஜீத் (காஸிமி), பொருளாளர் அஷ்ஷெய்க் K.றபியுதீன் (பக்ரி) மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள், பிரதேசக் கிளையின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, கிராமத்தின் நலன்சார்ந்த விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி.!

Maash

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்க முடிவு .

Maash

4 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 4 வலம்புரிச் சங்குகளுடன் வவுனியா ஒருவர், உற்பட மூன்று பேர் கைது.!

Maash