கோனகங்கார பொலிஸ் பிரிவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவில பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
மேலும், அதே பகுதியில் 04 ஏக்கர் நிலப்பரப்பில் 02 கஞ்சா தோட்டங்களில் பயிரிடப்பட்ட 116,230 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.