Breaking
Fri. Nov 22nd, 2024

இலங்கையில் துப்பாக்கி வன்முறைகள் தலைதூக்கியுள்ள நிலையில், தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்களை கைது செய்ய உதவும் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தகவல் வழங்கினால் 250,000 ரூபா வெகுமதியாக வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.சந்தேக நபர்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான கைதுகள் மற்றும் தகவல்களுக்கு 15 ஆயிரம் முதல் 250,000 ரூபா வரையில் வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

A B

By A B

Related Post