தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை

தொழில்நுட்பத் துறையில் அடுத்த பரிமாணம் 5ஜி தொழில்நுட்பம். 5ஜி தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், 5ஜியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்னர் சீனாவில் மருத்துவர்கள் 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு பன்றிக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.

மருத்துவத்துறையை பொருத்தவரை புதிய ஆராய்ச்சி விலங்குகளையும் எலிகளையும் வைத்து தான் பரிசோதனை செய்வது வழக்கம்.
பன்றிக்கு செய்த மருத்துவ அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதால் தற்போது அதைவிட ஒரு படி மேலே சென்று, சீன மருத்துவர் ஒருவர் சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

பெய்ஜிங் அரசு மருத்துவமனையில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தென் சீனாவில் உள்ள ஹைனன் பிராந்தியத்தில் இருந்து, லிங் ஜிபேய் என்ற மருத்துவர் அவருக்கு 5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் ரிமோட் உதவியுடன் அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.

மூளையில், பேஸ்மேக்கர் போன்ற ஒரு கருவியை பொருத்தும் இந்த 5ஜி அறுவை சிகிச்சை மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் ஹுவெய் நிறுவனத்துடன் சேர்ந்து, மருத்துவர் லிங் ஜிபேய் செய்துள்ளார்.

வீடியோ மூலம் தான் செய்த அறுவை சிகிச்சை, நேரில் இருந்து செய்வது போல, எந்த தங்கு தடையும் இல்லாமல், தெளிவாக இருந்ததாக லிங் தெரிவித்துள்ளார்.

Related posts

முகநூல் நண்பர்களிடம் எச்சரிக்கை! பரிசுதொகை கிடைக்கும்

wpengine

நாட்டின் பல பாகங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

Editor

உலகளாவிய வர்த்தகத்தில் பல்வேறு மாற்றங்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine