தெற்கிலிருந்து சுமார் 300 பிக்குகள் நேற்று திடீரென யாழ்ப்பாணம் வந்தனர். குடாநாட்டில் உள்ள விகாரைகளில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
நாவற்குழியில் பலவந்தமாக உருவாக்கப்பட்ட சிங்களக் குடியிருப்பில் விகாரை ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில் பிக்குகளின் வருகை பல சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பிக்குகளின் வருகையால் குழப்பங்கள் ஏதும் ஏற்படலாம் என்கிற எதிர்பார்ப்புக் காரணமாக அவர்களைச் சுற்றி ஏராளமான பொலிஸார் சிவில் உடையில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நாகவிகாரை மற்றும் நாவற்குழியில் அமைக்கப்பட இருக்கும் விகாரைக்கும் கடந்த 25ஆம் திகதி 300 பௌத்த பிக்குகள் வருவதாகக் கூறப்பட்டது. அது பற்றிய செய்திகள் வெளியான
நிலையில் அந்தப் பயணம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் 6 பேரூந்துகளில் 300 பிக்குகள் ஏ9 பாதையூடாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வருகை தந்தனர்.
ஆனையிறவைத் தாண்டி மீசாலை புத்தூர்ச் சந்தி வழியாக நிலாவரைக் கிணற்றடிக்கு வந்த அவர்கள் அங்கிருந்து யாழ்ப்பாணம் ஊ◌டாக காங்கேசன்துறைக்கு சென்று அங்கிருந்து மாதகல் வழியாக குறிகட்டுவான் ஊடாக நயினாதீவு விகாரைக்குச் சென்று இரவு அங்கேயே தங்கி சிறப்புப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.