உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

30 நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்களை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை..!

அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் 30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன.

ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள சில தூதரகங்களும் இதில் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சோமாலியா, ஈராக், மோல்டா, லக்சம்பர்க், கொங்கோ, மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட சில நாடுகளும் குறித்த பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளன.

பிரான்சில் அமெரிக்காவுக்கான ஐந்து தூதரகங்கள் உள்ள நிலையில், அவற்றையும் மூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜேர்மன் மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்கள், பிரித்தானியாவில் உள்ள ஒரு தூதரகம் ஆகியவற்றையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட தூதரகங்களின் பணிகளை அயல் நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் போப் பிரான்சிஸ்.!

Maash

பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுகொலை!

wpengine

104 இந்தியர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்திய அமெரிக்கா.!

Maash