பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

30ஆம் திகதி மன்னாரில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்மேள கூட்டம்! தலைவர் அழைப்பு

2021ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் சங்க சம்மேளக்கூட்டம் மன்னார் நகர சபை மண்டப்பத்தில் 1மணிக்கு  நடைபெற இருப்பதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாவட்ட மட்ட தொழில் சங்க தலைவரும்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான  எஸ்.எச்.எம். வாஜித் தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில் இந்த கூட்டத்திற்கு பிரதம அதிதியாக தேசிய தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளரும்,பொதுஜன பொரமூன கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத் மற்றும் சமுர்த்தி இராஜங்க அமைச்சருமான சிஹான் சேமசிங்க அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.


இந்த சம்மேள கூட்டத்தில் கலந்துகொள்ளும் உத்தியோகத்தர்களுக்கான கடமைவிடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களில் இயங்கி வரும் பிரதேச மட்ட நிர்வாகங்களை “புதுபிக்கும்” நடவடிக்கை முடிவுபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மாவட்ட சமுர்த்தி திணைக்களம் ,பிரதேச செயலகம்,வங்கி சங்கம் , மகா சங்கம்,தலைமை காரியாலயம் மற்றும் வெளிக்கள பி.பிவுகளில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட தொழில் சங்கத்தின் தலைவர் அழைப்புவிடுத்துள்ளார்.

Related posts

பௌத்த தலைவர்களிடம் வேண்டுகோளை விடுக்கின்றேன்-கலகொட அத்தே ஞானசார தேரர்

wpengine

மின் பாவனையாளருக்கு சந்தோஷமான செய்தி

wpengine

மாதம்பை முஸ்லிம்களின் காணிக்கு ஆபத்து! அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல்

wpengine