பிரதான செய்திகள்

3 ஆம் திகதிக்குள் வடக்கு மக்களின் காணிகளை இனம்காணுங்கள் : ஜனாதிபதி

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது நோக்கில்  அவர்களுடைய காணிகளை  இனம்காணும் செயற்பாட்டினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அறுவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன   தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலிலேயே  ஜனதிபதி   உரிய அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிகளை மீள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அந்தவகையிலேயே  வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில்   அந்த மக்களின்  காணிகளை இனம்காணும் செயற்பாட்டினை  நிறைவு செய்யவேண்டுமெனவும் இதன்போது ஜனாதிபதி   அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம உள்ளிட்டவர்களும் முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட்

wpengine

தேர்தலில் பிரதமர் மஹிந்த தலைமையில் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.

wpengine

பிரதேச சபைகளில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் ஆசனங்களை வென்றெடுக்கும் ஹக்கீம்

wpengine