பிரதான செய்திகள்

3 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மூவரும்,  ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோனிடமிருந்து தங்களுக்கான நியமனக்கடிதங்களை இன்று திங்கட்கிழமை பெற்றுக்கொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே, அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன. வெளிவிவகார, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ மற்றும் தபால் சேவைகள் ஆகிய மூன்று அமைச்சுகளுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரகோன்  நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின், இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன்,  1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன், அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு புதிய ஆளுனா் ரேஜிநோல்ட் குரே பம்பலப்பிடடி கோவிலில் ஆசி வேண்டி

wpengine

மியன்மாரில் தொடரும் கொலை

wpengine

கல்வியினால் பலம் பொருந்திய நாடுகளை கூட இஸ்ரேல் ஆட்டிப்படைக்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine