பிரதான செய்திகள்

3 வருடங்களின் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் மே தினக் கொண்டாட்டம் இம்முறை கொழும்பில்!

2023ம் ஆண்டு மே தின நிகழ்வை மாபெரும் அளவில் நடாத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதன்படி, இம்முறை மே தின நிகழ்வை கொழும்பு – சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று, மே தினத்தன்று மே தின பேரணியொன்றையும் நடாத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், மே தின நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள தமது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வருகைத் தரவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மூன்று வருடங்களாக மே தின நிகழ்வை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

57 சபை அமர்வி்ல் ஒரு தடவை மட்டும் கலந்துகொண்ட மு.கா. முஹம்மது றயீஸ்

wpengine

கல்வியல் கல்லூரி நியமனத்தில் மு.கா மக்களை ஏமாற்றுகிறதா?

wpengine

மன்னார் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்! பாக்கீர் அதிதி

wpengine