கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவன வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் ஊரடங்கு சட்டத்தை நீக்காமல் தொடர்ந்து ஒரு மாதத்திற்காகவது அமுல்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அப்படி செய்யவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நிலைமைக்கமைய மேலும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 159 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 24 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.