பிரதான செய்திகள்

3 மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்து 3 மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியும்.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செலவுத் திட்டம் மார்ச் மாதத்தின் பின்னர் சமர்ப்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதி மற்றும் அதிகாரத்திற்கு வரும் அரசாங்கத்திற்கு தேவையான முறையில் வரவு செலவுத் திட்டத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி நான்கரை வருடங்கள் கடந்த பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு 19ஆவது அரசியமைப்பில் அதிகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய நவம்பர் மாதம் 16ஆம் திகதி அதிகாரத்திற்கு வரும் ஜனாதிபதியினால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

Related posts

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவியினை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை

wpengine

போலீசாரை மோதி செல்ல முட்பட்ட டிப்பர் மீது துப்பாக்கிச்ச்சூடு..!

Maash

கழிவு அகற்றும் போது விடயத்தில் முசலி பிரதேச சபையில் கைகலப்பு!

wpengine