செய்திகள்பிரதான செய்திகள்

3 இலட்சம் பேர் போதைபொருளுக்கு அடிமை: 4 புதிய புனர்வாழ்வு மையங்களை நிறுவ திட்டம்..!

நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய ஆபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை சுட்டிக்காட்டுகிறது.

4 புதிய புனர்வாழ்வு மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய ஆபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.

21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான புனர்வாழ்வு மையத்தை பேராதனை பகுதியில் நிறுவ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது..

குருணாகல், மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் புதிய மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாகவும் 250 மில்லியன் ரூபா நிதி இந்த வேலைத்திட்டத்திற்காக பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு ஏரிபொருள் நிலையத்தின் அவல நிலை -பாவனையாளர்கள் விசனம்

wpengine

22 மக்கள் வங்கி சேவை மத்திய நிலையங்கள் இன்று முதல் மூடல்

wpengine

மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது

wpengine