பிரதான செய்திகள்

3 ஆம் திகதிக்குள் வடக்கு மக்களின் காணிகளை இனம்காணுங்கள் : ஜனாதிபதி

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவது நோக்கில்  அவர்களுடைய காணிகளை  இனம்காணும் செயற்பாட்டினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிறைவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அறுவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன   தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலிலேயே  ஜனதிபதி   உரிய அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணிகளை மீள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அந்தவகையிலேயே  வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்தும் நோக்கில்   அந்த மக்களின்  காணிகளை இனம்காணும் செயற்பாட்டினை  நிறைவு செய்யவேண்டுமெனவும் இதன்போது ஜனாதிபதி   அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம உள்ளிட்டவர்களும் முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வவுனியாவில் மஹிந்தவின் வேட்பாளர் மீது தாக்குதல்

wpengine

சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங். றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான “உணவுகூட” திறப்புவிழா

wpengine