பிரதான செய்திகள்

3ஆம் ஆண்டு மாணவி பாத்திமா ஹசீதாவின் ஜனாஷா நல்லடக்கம்

புதிய காத்தான்குடி நூறானியா மையவாடி வீதியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு பாடசாலை மாணவி எம். ஜே. பாத்திமா ஹஸீதாவின் ஜனாஸா தொழுகை இன்று காலை 10:15 மணிக்கு புதிய காத்தான்குடி நூறானியா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஜனாஸா தொழுகையை நிறவேற்றிய பின் அப்பள்ளிவாசலுக்குரிய மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதிய காத்தான்குடி 6ம் குறிச்சி, நூறானியா மையவாடி வீதியைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் ஐ.எல்.எம். ஜிம்ஸார் என்பவரின் 3வது மகளும், மட்/மம/நூறானியா வித்தயாலயத்தில் ஆண்டு 3 இல் கல்வி கற்று வந்தவருமான எம்.ஜே. பாத்திமா ஹஸீதா (வயது 09) எனும் மாணவி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு காலமானார்.

இரண்டு தினங்களுக்கு முன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இம்மாணவி காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார்.உயர்ந்தோன் அழ்ழாஹ், இம்மாணவியை அவனது சுவனத்தில் சேர்த்தருள்வானாக! அவரது பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர், உடன்பிறப்புக்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் ஆறுதலளிப்பானாக!!

இந்த ஜனாஸா தொழுகையிலும், நல்லடக்கத்திலும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்பு

wpengine

Braking பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம்

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எந்த நேரத்திலும் நடாத்தத் தயார்!– மஹிந்த

wpengine