உலகச் செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா! மோடி, சச்சின் வாழ்த்து

ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு, பிரதமர் மோடி, சச்சின் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்றில் சாய்னா 11-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவின் சன் யூவை தோற்கடித்தார். முன்னதாக சாய்னா, அரையிறுதியில் சீனாவின் இகன் வாங்கையும், காலிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக்கையும் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓப்பனில் சாய்னா சாம்பியன் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் அவர், 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

இந்த சீசனில் சாய்னா வென்ற முதல் பட்டம் இதுதான். முன்னதாக இந்த சீசனில் இந்திய ஓப்பன், மலேசிய ஓப்பன், ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் சாய்னா அரையிறுதி வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஓப்பனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சாய்னா நேவாலுக்கு, ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளதாக இந்திய பாட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா கூறும்போது, ”அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கும் சாய்னாவுக்கு வாழ்த்துகள்.

அவருடைய விளையாட்டு வாழ்க்கையில் இது மற்றொரு மைல்கல். இந்த வெற்றி ஒலிம்பிக் போட்டியில் சாய்னா சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும். இந்த நேரத்தில் சாய்னாவின் வெற்றிக்காக பாடுபட்ட அவருடைய பயிற்சியாளர் விமல் குமார் மற்றும் உதவி அலுவலர்களுக்கும் வாழ்த்துகள்” என்றார்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாய்னா நேவாலுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ”இது ஒரு பிரமாண்ட வெற்றி. உங்களின் பிரமாண்டமான வெற்றிக்கு வாழ்த்துகள் சாய்னா. விளையாட்டுத் துறையில் உங்களின் சாதனையை நினைத்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது” என குறிப்பிட்டு உள்ளார்.

Congratulations @NSaina for the stupendous victory. The entire nation is very proud of your sporting accomplishments.

”2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியாவிற்கு பெருமையை உருவாக்கி தந்துள்ளார் சாய்னா” என்று மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.

”ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன் பட்டத்தை நீங்கள் 2வது முறையாக வென்றதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையடைகிறது. ரியோவில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்” என்று கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

A moment of pride for the entire nation as @nsaina wins the Australian Open for the second time. Good luck for Rio!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆஸ்திரேலிய ஓபனில் 2-வது முறையாக வெற்றி பெற்றிருக்கும் சாய்னாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார். இதேபோல், லஷ்மண், யுவராஜ் சிங், தவான் போன்றோரும் சாய்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

”நீங்கள் தொடர்ந்து இந்தியர்களுக்கு பெருமைகளை சேர்த்து வருகிறீர்கள். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை நீங்கள் 2வது முறையாக வென்றதற்கு என் வாழ்த்துக்கள்” என பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது வாழ்த்து செய்தியில் வாழ்த்தி உள்ளார்.

இதேபோல் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், ”சாய்னா மிகச் சிறந்த பெண். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்முடைய நாடடிற்கு பெருமைகளை சேர்க்க வேண்டும்” என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.

Related posts

களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு!

wpengine

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடத்திற்கான ஊடக மாநாடு

wpengine

செல்லத்தம்பு அவர்களின் இறப்பு எமது கட்சிக்கு மாத்திரமல்லாமல்,மாந்தை சமூகத்திற்கும் ஒரு இழப்பாகும்

wpengine