பிரதான செய்திகள்

2ஆம் திகதி வேட்பாளர்களை கொழும்புக்கு அழைக்கும் மஹிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைத்து வேட்பாளர்களும் ஜனவரி மாதம் 2ம் திகதி கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் விசேட சந்திப்பு ஒன்று வேட்பாளர்களுடன் நடத்தப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அனைத்து வேட்பாளர்களும் தங்களது தொகுதிக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றப் போவதாக இதன் போது உறுதிமொழி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 8000 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர்களை தெளிவூட்டும் விசேட நிகழ்வு ஒன்று இன்றையதினம் நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது.

Related posts

வட.மாகாண 1756 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் – ஜெகதீஸ்வரன் எம்.பி.

Maash

அலி ஸாஹிர் மௌலானா கொவிட் 19- தேசிய முஸ்லிம் செயலணி ஆரம்பித்தார்.

wpengine

ரணில், மைத்திரி அரசுக்கு எதிராக மன்னார் தொடக்கம் ஆர்ப்பாட்டம்

wpengine