பிரதான செய்திகள்

29வயது இளைஞனுக்கு செல்பியினால் வந்த விளைவு

இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பதுளை எல்லே பிரதேசத்தில் இருந்து கொஸ்லந்த தியலும நீர் வீழ்ச்சியை பார்க்க சென்ற 29 வயதான இளைஞன் நீர்வீழ்ச்சிக்கு மேல் இருக்கும் ஏரியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11.30 அளவில் நடந்ததாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி படம் எடுக்க முயற்சித்த போது இளைஞன் தவறி விழுந்துள்ளார்.

பதுளை எல்லே பிரதேசத்தில் வசித்து வந்த வீரசிங்க என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது முச்சக்கர வண்டியில், இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் தனது உறவினருடன் கொஸ்லந்தைக்கு சென்றிருந்தார்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! ஜனாதிபதி ஆலோசனை- லக்ஷ்மன் யாப்பா

wpengine

பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து ஒதுங்கினாலும் போராட்டம் தொடரும் -பஷீர்

wpengine

தனியார் மயமாக்கல்! அரசாங்காத்திற்கு எதிராக பிரச்சாரம் -அனுர குமார திஸாநாயக்க

wpengine