பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரசாங்க அதிபர் ஸ்டான்லி டீமெல் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களின் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30மணியளவில் இடம்பெற்றது .

இக் கலந்துரையாடலில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை ஒழுங்கீனம், இளம்வயது திருமணம் மற்றும் கர்ப்பம், உடல் உல ரீதியான பிரச்சினைகள், பாடசாலை இடைவிலகல், விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், சிறுவர் இல்லங்கள், அறநெறி வகுப்புக்கள், போதைப் பொருள் பாவனை, சிறவர் பாதுகாப்பு, கடந்த கால கூட்டக் குறிப்பின் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வட்அப் குருப் அட்மீனுக்கு எதிராக (சி.பி.ஐ) விசாரணை

wpengine

வட,கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களை பற்றி சிங்கள மக்களுக்கு தெரிவிக்கின்றேன்

wpengine

முசலி பிரதேச செயலகத்தில் தஞ்சமடைந்த சமுர்த்தி பயனாளிகள்! பலர் கவலை

wpengine