பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முஷாரப் கோரிக்கை

நாட்டில் மேற்கொள்ளப்படும் சுயாதீன விசாரணை அறிக்கைகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அதன் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் அதன் அமைப்பை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் விளைவாக அவர் மீண்டுமொரு பூதாகரத்தை கட்டவிழ்த்துள்ளார் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் (கோப்குழு) அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுயாதீன விசாரணை அறிக்கைகள் சபைக்கு சமர்க்கப்படுகின்றபோதும் அதன் தாக்கங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பது தாெடர்பில் சிந்திக்கவேண்டி இருக்கிறன்றது.

உதாரணமாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக பாரியளவில் பேசப்பட்டது. பாராளுமன்ற கோப்குழுவிலும் அதுதொடர்பில் விசாரிக்கப்பட்டுஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் அதன் குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இவ்வாறு சுயாதீன விசாரணை குழுக்களின் அறிக்கைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் பெறுமதி அற்றதாகவே காணப்படுகின்றன.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களை அறிந்துகொள்ள எமது நாட்டு மக்கள் மாத்திரமல்லாது, சர்வதேச மக்களும் ஆர்வமாக இருந்தனர்.

அதன் அறிக்கையில் பல முக்கியமான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தடைசெய்யப்படவேண்டிய அமைப்புகள் பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாருடைய கருத்துக்களால் ஒருசில இளைஞர்கள் தூண்டப்பட்டு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தொடர்பாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரரின் அமைப்பையும் அதன் செயலாளரையும் தடைசெய்யவேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் குறித்த அமைப்பையும் செயலாளரையும் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஞானசார தேரரின் கருத்துக்கள் மற்றும் செயல்களால் தூண்டப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருந்தபோதும் அந்த அமைப்பை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் விளைவாகவே மிண்டுமொரு பூதாகரமான பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மக்களை குழப்பும் வகையில் தெரிவித்திருக்கின்றார்.

எனவே மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறப்போவதாகவும் எப்போது, யார் மேற்கொள்ளப்போகின்றார்கள் என்ற தகவல்கள் தனக்கு தெரியும் என தெரிவித்திருக்கும் ஞானசார தேரர் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கைக்கு நாங்கள் மதிப்பு வழங்குவதாக இருந்தால் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும் என்றார்.

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

காலி முகத்திடல் இளைஞர்களுக்கு மஹிந்த அழைப்பு! நான் பேச தயார்

wpengine

மஹிந்தவுக்கும் மங்களராமய விஹாதிரபதிக்கும் தொடர்பு

wpengine

மன்னார்,மடுமாதா தேவாலயம் சென்ற அமைச்சர் ஹக்கீம்

wpengine