பிரதான செய்திகள்

2700 மில்லியன் ரூபா சமுர்த்திப்பணம்! அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை -அமீர்அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2700 மில்லியன் ரூபா சமுர்த்திப்பணம் சமுர்த்தி வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி தெரிவித்துள்ளார்.

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமீர்அலி இதை கூறியுள்ளார்.

இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை! வீதியில் இறங்கத் தயார்.

wpengine

அமெரிக்காவில் வாழும் பெண்ணை திருமணம் முடித்த ரம்புக்வெல்லவின் புதல்வன்

wpengine

இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் ஹக்கீம் இருப்பது முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்தானதாகும்

wpengine