பிரதான செய்திகள்

27 புரட்சியின் ஆரம்பம்! மஹிந்தவின் மேடையில் முன்று அமைச்சர்கள்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மூன்று அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள புரட்சியின் ஆரம்பம் என்ற தொனிப்பொருளில் நடக்கும் கூட்டத்தில் இந்த அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகினால், அவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மறைமுகமாக அச்சுறுத்தியதாக இவர்களில் ஒரு அமைச்சர் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரிடம் கூறியுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

கல்முனை சாஹிரா பாடசாலையின் புதிய செயலாளர்

wpengine

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

wpengine

வடக்கில் உள்ள இராணுவ முகாம் அகற்ற தேவை இல்லை -அஸ்கிரிய மகா நாயக்கர்

wpengine