மைக்ரோசொப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் – மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றனர்.
இந்த விவாகரத்து பற்றி கடந்த ஜனவரியில், பில் கேட்ஸ் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், 27 ஆண்டு கால திருமண வாழ்வை விவகாரத்து மூலம் முடித்துக் கொண்டது தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடந்த நேர்காணலில் மெலிண்டா பிரெஞ்ச் பேசுகையில், மிகவும் நெருங்கிய உறவில், உங்களது மதிப்புடன் உங்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்போது, பிரிவது என்பது மிகவும் அவசியமாகிறது.
அவர் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது, எனவே அதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்த வாழ்க்கை. எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்தார்.