செய்திகள்பிரதான செய்திகள்

26 வயதுடைய யுவதியின் கழுத்தை அருத்து, தங்க நகை திருட்டு! யுவதி பலி!

வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (02) மாலை இரத்தினபுரியில் குருவிட்ட தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குருவிட்ட – தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஆவார். யுவதியின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசபந்து தென்னகோன் குற்றவாளி : பாராளுமன்ற விசாரணைக் குழு அறிக்கை!!!

Maash

ரிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா? – எஸ்.ரத்னஜீவன் எச். ஹூல் –

wpengine

சஜித்துக்கு முட்டுக்கட்டையாகும் ஜே.ஆரின் மேட்டுக்குடி வாதம்?

wpengine