உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

25 வயது இளைஞரின் காதலி வழக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை

அமெரிக்காவில், இருவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபருக்கு அந்நாட்டு சட்டப்படி விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒக்கலஹாமா மாகாணத்தைச் சேர்ந்த டெனால்டு கிரான்ட் என்ற 25 வயது இளைஞரின் காதலி வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை பிணையில் எடுக்க பணம் தேவை என்பதால், 2001 ம் ஆண்டு ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்து கொள்ளையடிக்க அந்த நபர் முயன்றார். இதன்போது ஏற்பட்ட மோதலில் இருவரை கொலை செய்தார். சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2005-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்க கோரி பல முறை மனுக்கள் தாக்கல் செய்தும் தள்ளுபடியானது.

இதையடுத்து நேற்று அமெரிக்க சட்டப்படி குற்றவாளி டெனால்டு கிரான்ட்டிற்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவில் இந்தாண்டில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகம்!

Editor

சஜித் என்னைப் பொம்மையாக்க வேண்டாம்.மனசாட்சிக்கு இணங்கவே ஆதரவளிப்பேன்

wpengine

மன்னார் கோந்தை பிட்டி கடல் பகுதியில் பெண்ணின் சடலம்.

wpengine