பிரதான செய்திகள்

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு நிறைவு

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது.

குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தக் காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது.
வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் 15 ஆயிரம் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 14ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க நடவடிக்கை- அமைச்சர் காஞ்சன விஜேரத்ன

wpengine

மாட்டிறைச்சி தின்றாலும் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது

wpengine

முஸ்லிம் சேவையின்‘பாரம்பரியம்’ நிகழ்ச்சியில் அமீன்

wpengine