பிரதான செய்திகள்

24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் மைத்திரி

இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை, எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை. அமைச்சரவை இல்லை.
எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் .

தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டவுள்ளேன். அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அதிலும் ஆராயப்படும் எனவும் மைத்திரி இதன்போது கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கண்டுபிடிக்கப்பட்ட வாள்கள் பள்ளிவாசல்களில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல

wpengine

இணைய தளங்களை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை

wpengine

வவுனியா- செட்டிகுளத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்

wpengine