செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

24 மணிநேர கடவுச்சீட்டு அலுவலக சேவை ?

கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டில் தற்போது ஊழல், மோசடியற்ற ஆட்சியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் நாட்டுக்கு வரும் நிலையேற்பட்டுள்ளது.

நம் நாட்டின் வரலாற்றில் உலக வங்கி வழங்கும் பாரிய தொகையொன்றை அடுத்த வருடமளவில் நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்திக்காக அந்த வங்கி வழங்கவுள்ளது.

நாம் ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றங்களை படிப்படியாக ஏற்படுத்தி வருகின்றோம்.

அதேபோன்று கடவுச்சீட்டு நெருக்கடியை தீர்ப்பதற்கும் நாம் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வோம். தற்போதைய கடவுச்சீட்டு நெருக்கடியானது முன்னைய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

புதிதாக எதையும் நாம் கேட்கவில்லை எமது பூர்வீக பூமியை தாருங்கள்-அமீர் அலி

wpengine

இடையூறுமின்றி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் -மைத்திரி

wpengine

அவரது மறைவு சமுதாயத்துக்கு பேரிழப்பு அமைச்சர் றிஷாட் கவலை

wpengine