கலவி என்பது ஆண், பெண் நெருக்கத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். செக்ஸ் என்பது சிகிச்சை அல்ல அது அன்பின் வெளிப்பாடாகும். கலவியின் போது உலகின் மற்ற விஷயங்களில் இருந்து விலகி காதலையும், கலவியையும் மட்டுமே மனதில் இருக்க வேண்டும். கலவியின் போது பேசக்கூடாத விஷயங்கள் சில உள்ளது, ஏனெனில் அவை உங்களின் கலவியின் போக்கையே மாற்றிவிடும்.
கலவியின் போது பேசக்கூடிய சில கவர்ச்சியான விஷயங்கள் உள்ளது இவை உங்கள் அனுபவத்தை கூடுதல் இன்பம் நிறைந்ததாய் மாற்றும்.அதேபோல நீங்கள் பேசக்கூடாத சொற்கள் மற்றும் விஷயங்கள் சில உள்ளது. இந்த விஷயங்கள் உங்கள் கலவி மனநிலையை மாற்றும். குறிப்பாக பெண்கள் சில தலைப்புகளை படுக்கையறைக்குள் கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. இந்த பதிவில் கலவியின் போது தடைசெய்யப்பட வேண்டிய தலைப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
முன்னாள் காதலர்கள்
இதை ஆண், பெண் இருவரும் விரும்புவதில்லை. உங்கள் கடந்தகால உறவுகளைப் பற்றி உங்கள் கூட்டாளருடன் பேசுவதற்கு ஒரு நேரமும் இடமும் இருக்கிறது, ஆனால் அவர் உங்களுடன் படுக்கையில் இருக்கும்போது நிச்சயமாக இல்லை. இது அந்த சூழ்நிலையை முற்றிலுமாக மோசமாக மாற்றக்கூடும்.
வேலை தொடர்பான விஷயங்கள்
நீங்கள் உண்மையிலேயே மன அழுத்தம் நிறைந்த வேலை வாழ்க்கையைக் கொண்டிருக்கலாம், ஆனால் உங்கள் மன அழுத்தத்தை வெளிப்படுத்த வேண்டிய இடம் படுக்கையறை அல்ல. எல்லா அழுத்தங்களையும் விட்டுவிட்டு நீங்களே ரசிக்கக்கூடிய நேரம் இது. உங்களின் கவலைகளை வெளிப்படுத்த இது சரியான நேரம் அல்ல, கலவிக்கு பிறகுகூட உங்களின் கவலைகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்தலாம். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள் என்றால், இது உங்கள் மனதை நிதானப்படுத்த சிறந்த வழியாகும்.
பெற்றோர்களின் பிரச்சினைகள்
பெற்றோரைப் பற்றி அல்லது உடன்பிறப்புகளைப் பற்றி படுக்கையில் பேசக்கூடாது. குறிப்பாக பெண்கள் தங்கள் மாமியாரிடம் இருக்கும் பிரச்சினைகளை பற்றி கலவியின் போது புகாரளிக்கக்கூடாது. சில நிமிடங்கள் தங்கள் வாயையும், மனதையும் அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
கடைசி சண்டை
நீங்கள் இருவரும் கடைசியாக நடத்திய கடைசி சண்டையை நீங்கள் தீர்க்கவில்லை என்றாலும், உடலுறவின் போது அதைப்பற்றி விவாதிக்க முயற்சிக்காதீர்கள். அது கவர்ச்சியான ஒன்றாக இருந்தாலும் கூட அதனை அந்த சமயத்தில் உங்கள் தரப்பு நியாயங்களை கூற பயன்படுத்திக் கொள்வது தவறான ஒன்றாகும். சண்டைகளை தீர்க்கத்தான் கலவி பயன்பட வேண்டுமே தவிர கலவியை பயன்படுத்தி சண்டையை வளர்க்கக்கூடாது.
குழந்தைகளைப் பற்றி
உங்கள் உறவின் அடுத்த கட்டத்தைப் பற்றி ஆலோசிப்பது நல்லதுதான். ஆனால் உடலுறவில் இருக்கும்போது அதைப்பற்றி விவாதிக்க வேண்டாம். பொதுவாக மக்கள் தங்கள் மனதில் இருப்பதை பேசுவதற்கு முன் யோசிப்பதில்லை, இது மிகவும் தவறான விஷயம். குழந்தைகளை பற்றி உங்கள் ஓய்வு நேரத்திலேயோ அல்லது மாலை நேரத்திலேயோ விவாதியுங்கள். உடலுறவின் போது இதனை பற்றி விவாதிப்பது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உங்களின் செக்ஸ் விருப்பங்கள்
நீங்கள் படுக்கையில் செய்ய விரும்பும் சில வித்தியாசமான முயற்சிகளைப் பற்றியும், உங்களின் ஆசைகளைப் பற்றியும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே தெரிவித்து விடுங்கள். உடலுறவின் போது இதைப்பற்றி விவாதிப்பதோ அல்லது ஆசைகளை கூறுவதோ தேவையில்லாத அசௌகரியங்ளை ஏற்படுத்தும். உங்கள் துணையின் மீது தேவையில்லாத அழுத்தத்தை திணிக்க கலவியின் போது திணிக்க வேண்டாம்.
அளவுகள் குறித்து பேசவேண்டாம்
உடலுறவின் போது பேசக்கூடாத முக்கியமான விஷயம் ஆணுறுப்பின் அளவை பற்றியது. ஆண்களும் தங்கள் உறுப்பின் அளவு குறித்து பாதுகாப்பற்ற உணர்வு கொள்ளக்கூடாது, பெண்களும் அதனைப்பற்றி எதுவும் பேசக்கூடாது. அதேசமயம் பெண்களும் தங்கள் உடலமைப்பு பற்றிய கேள்விகளை ஆண்களிடம் கேட்கக்கூடாது. அவரவர் கண்களுக்கு அவர்களின் துணை அழகாகத்தான் காட்சியளிப்பார்கள்.