பிரதான செய்திகள்

22 மக்கள் வங்கி சேவை மத்திய நிலையங்கள் இன்று முதல் மூடல்

நாட்டில் நிலவும் கோவிட்-19 தொற்று நோய் பரவல் காரணமாக மக்கள் வங்கியின் கிளைகள் உட்பட 22 சேவை மத்திய நிலையங்கள் இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கி தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனைக் கூறியுள்ளது.

பதுளை மாவட்டம் – கெப்பெட்டிபொல கிளை

கொழும்பு மாவட்டம் – கட்டுபெத்த கிளை, சொய்சாபுர சேவை மையம் மற்றும் நாவல சேவை நிலையம்.

கம்பஹா மாவட்டம் – கொட்டதெனியாவ கிளை .

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – குடாவெலல கிளை, ஹம்பாந்தோட்டை கிளை மற்றும் கடல்சார் சேவை நிலையம்.

கண்டி மாவட்டம் – பிலிமதலாவை கிளை மற்றும் ஹதரலியத்த கிளை . கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை கிளை .

குருநாகல மாவட்டம் – நாரம்பொல கிளை, கொபைகனே கிளை, , பிங்கிரிய கிளை, நிக்கவரெட்டிய கிளை, கட்டுபொத்த சேவை நிலையம், பொரலுவெவ சேவை நிலையம் மற்றும் பன்னல சேவை நிலையம்.

மாத்தறை மாவட்டம் – கந்தர கிளை. திருகோணமலை மாவட்டம் – கந்தளாய் கிளை மற்றும் மொல்லிப்பொத்தனை சேவை நிலையம் என்பன இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை- மஹிந்த

wpengine

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர்…

wpengine

வவுனியா பேருந்து நிலையம் தொடரும் போராட்டம்

wpengine