மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை மாணவர் ஒருவர் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல நிவந்தம பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி இரண்டு வயதுடைய யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மாணவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனவும் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்தமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.