பிரதான செய்திகள்

22வது திருத்தம்! 10பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம்

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இரத்தாகும் என்பதால், கௌரவமான முறையில் பதவி விலகுமாறு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரசில் உயர் மட்டப்பதவிகளை வகித்து வரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் இந்த தீர்மானத்தை எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இரட்டை பிரஜை உரிமையுடன் இலங்கையில் மகிழ்ச்சிக்காக வேலை செய்யும் நபர்கள் தற்போது தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் 22 வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் அந்த திருத்தச்சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ நாட்டின் உயர் பதவிகளையோ வகிக்க முடியாது. 

இரட்டை குடியுரிமை பெற்றவர் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டுமாாயின் அவர் தனது இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

மன்னார் மக்களுக்கான அறிவித்தல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்

wpengine