பிரதான செய்திகள்

21ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம்

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பிலான சுவரொட்டிகள் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரிக்கு எதிர்வரும் 21ஆம் திகதி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் தொழிநுட்ப கூடம் ஒன்று திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு தொழிநுட்ப கூடத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்நாளில் தெற்கே குருநாகல் பகுதியில் திடீரென ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பான விமான படையினரின் அறிவித்தலுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கான பயணத்தை ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில் 2 வருடங்களின் பின் முல்லைத்தீவிற்கு குறிப்பாக அதே பாடசாலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்து தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மன்னாரில் உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முஸ்லிம் மாணவி முதலாம் இடம்

wpengine

பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காணவிரும்ப வில்லை -கோத்தா

wpengine

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

wpengine