பிரதான செய்திகள்

21வயதான இளைஞனை கொலை செய்து குழியில் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவு!

எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் விவசாய நிலம் ஒன்றில் கொல்லப்பட்டு பாதியளவில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று எல்பிட்டிய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் எல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளினால் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய எத்கந்துர பிரதேசத்தில் வசிக்கும் சந்த குமார சரத்குமார என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த இளைஞன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பாததால், அவரை காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த இளைஞனின் நெருங்கிய நண்பன் என கூறப்படும் 40 வயதுடைய நபரின் வீட்டில் இருந்து குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இளைஞனின் உடல் புதைக்கப்பட்ட குழிக்கு அருகில் அவரது பணப்பையையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் நெருங்கிய நண்பரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்ற பொலிஸார், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மன்னாரில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கைது!

Editor

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் பொதுபல சேனா

wpengine

வட ,கிழக்கு அபிவிருத்திற்கு உதவ உள்ள சீனாவின் அரச நிறுவனம் -ஹிஸ்புல்லாஹ்

wpengine