பிரதான செய்திகள்

20ஆம் திருத்தம் ஆபத்தானது ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது

உத்தேச 20ஆம் திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை அரசாங்கம் புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதி அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,20ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பின்னர் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி உச்சபட்ச நலன்களை பெற்றுக்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19ஆம் திருத்தச் சட்டத்தின் குறைப்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 19ஆம் திருத்தச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் 20ஆம் திருத்தச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

விவசாய நிலங்களை பார்வையீட்ட அமீர் அலி

wpengine

’தேர்தல் காலத்தில் துரோகிகளாக முத்திரை குத்தப்படுவோர் பின்னர் சமூகக் காவலரென போற்றப்படுகின்றனர். – பட்டிருப்பில் ரிஷாட்

wpengine

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வர்த்தக நிலையங்களில் சோதனை!

Editor