பிரதான செய்திகள்

207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 207 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 207 பேரில் 40 பேர் வெளிநாட்டவர்கள் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 9 பேர் உறுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய உயிரிழந்தவர்கள், அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் போர்த்துகல் நாட்டவர்கள் என உறுதியாகியுள்ளது.

அத்துடன் டச்சு நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டச்சு வெளிவிவகார அமைச்சர் Stef Blok உறுதி செய்துள்ளார்.

அவர்களுடன் போர்த்துகள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!

Editor

அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.

wpengine

ஞானசார தேரரின் அடிப்படை மனு விசாரணை இன்று

wpengine