2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச தெரிவாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணத்தை நேற்று சுபநேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி செலுத்தியது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
” ஆளுங்கட்சியால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் பெறுபேறு வெளியாகும்போது இதனை அறியமுடியும்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலை எமது அணி வெற்றிகரமாக எதிர்கொள்ளும். மக்கள் எமது பக்கம் உள்ளனர். அதேபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் மீள இணைவார்கள் என நம்புகின்றோம்.
அதேவேளை, இந்நாட்டில் உள்ள சிறந்த எதிர்கால தலைவர் நாமல் ராஜபக்சதான். 2030 ஆம் ஆண்டாகும்போது அவர் ஜனாதிபதியாவதை தேசிய மக்கள் சக்தியால் மட்டுமல்ல எந்த தரப்பாலும் தடுக்க முடியாது.” – என்றார்.