அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

2029ம் ஆண்டிலேயே தேசிய மக்கள் சக்தியினால் சுயாதீனமான ஓர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும்.

எதிர்வரும் 2029ம் ஆண்டிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும் மூன்றாண்டு காலப் பகுதியிலும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையிலான வரவு செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையை இழக்க செய்ததன் பின்னரே தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் எதிர்வரும் 2029ம் ஆண்டிலேயே தேசிய மக்கள் சக்தியினால் சுயாதீனமான ஓர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு மஹிந்த ஆலோசனை

wpengine

வவுனியாவில் தற்கொலை! ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

wpengine

இலஞ்சம் பெற்ற தொழிநுட்ப அதிகாரி கைது

wpengine