பிரதான செய்திகள்

2025ஆம் ஆண்டில் 5லச்சம் வீட்டு திட்டம் சஜித்

(அஷ்ரப் ஏ சமத்)

நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கேற்ப 5 இலட்சம் வீடுகளை நிர்மாணிக்குத் திட்டத்தின் கீழ்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் கருத்திட்டத்தின்  கீழ்  2025ஆம் ஆண்டுக்குள் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்தின்  ஓர் அங்கமாக ஏற்கனவே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தனியாா் கம்பனிகளின் முதலீட்டுடன்  தொடா்மாடி வீடமைப்புத்திட்டங்களை கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நிர்மாணித்து வருகின்றது.

இத்திட்டத்தினை தேசிய  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அரச காணிகளை தனியாா் நிர்மாணக் கம்பனிகளுக்கு வழங்கி 10 மாடிகள் கொண்ட தொடா் மாடி வீடுகளை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே களுத்துறை மாவட்டத்தில் வாதுவையிலும், ”சீ பிரிஸ்,”  கொழும்பு மாவட்டத்தில் அத்துருக்கிரியவிலும், பனகொடையிலும்   ”கிரீன் வெளி,”  என்ற அடுக்கு மாடி வீடுகள்   நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இதில்  வீடுகள் மற்றும், கடைத்தொகுதிகள், நீர்த்தாடகங்கள்  ஏனை சகல  வசதிகள் கொண்டு   நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ் வீடுகளை பெறுவதற்கு தேசிய சேமிப்பு வங்கி ஊடகா வீடமைப்புக் கடனும் வழங்கப் பட உள்ளது.  இவ் வீடுகள் 25 -இலட்சம் தொட்டு 80 இலட்சம் ருபா  வரையில் விற்பனைக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.unnamed-1

கம்பஹா மாவட்டத்தில்  ராகமவில் தம்புவேட்ட என்ற பிரதேசத்தில் ”லாவன்யா ஹைட்ஸ் ”என்ற மாபெறும் வீடமைப்புத் தொகுதிகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச முன்னாள் சபாநாயகா் ஜேசப் மைக்கல் பெரேரா மற்றும் அரசியல் பிரநிதிகளினால்   நேற்று(12) நிர்மாணப்பணிகள் ஆரம்பித்து  வைக்கபட்டது.

இங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் பிரேமதாச

 

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோா்களின் தலைமையில் கீழ் தனக்கு தரப்பட்டுள்ள இந்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு ஏதாவது நன்மை கிட்ட வேண்டும். ஒரு நாட்டில்  பிறந்த ஒரு குடிமகனுக்கு  தனக்கென்று ஒரு நிழல் வீடு இருக்க வேண்டும். அவனுக்கென்று ஒரு முகவரி இருப்பதற்கு வீடொன்று இருத்தல் வேண்டும். அந்த வகையில் இந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களை பாவித்து தன்னால் முடியமளவுக்கு தனது சேவையை செய்து வருகின்றேன். இந்த அமைச்சினை ஆரம்பித்து  நாடு முழுவதிலும் 250 வீடமைப்பு கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டன, இதுவரை 15 கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டு ஏழை எளிய வீடற்ற குடும்பங்களுக்க வீடுகள் வழங்கி அவா்களை அதில் குடியமா்த்தியுள்ளேன். அதே போன்று எதிா்வரும் ஆண்டின் டிசம்பருக்குள் 200 வீடமைப்புக் கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும்.unnamed-2

அந்த வகையில் நகரங்களில் வாழும் மக்களுக்காக பிரதம மந்திரியின் வீடமைப்பு ஆலோசனையின் கீழ் 124 தொடா் மாடி வீடுகள் திட்டம் அடுத்த 2025க்குள் நிர்மாணிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படும். இதற்கான அரச தணியாா் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  அத்திட்டத்தில்  90  தொடா் மாடி வீடுகள் திட்டங்கள் –  நடுத்தர வருமாணம்முடைய குடும்பங்களுக்கு நிர்மாணிக்கும் திட்டங்களாகும்.  ஒவ்வொரு தொட்ர் மாடி வீடொன்று ருபா  50 இலட்சம் பெறுமானத்தில் நிர்மாணிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும். அத்திட்டத்தில் 26 திட்டங்களை தேசிய வீடமைப்பு  அபிவிருத்திக்கு சொந்தமான காணிகள் தணியாா் கம்பணிகளுக்கு வழங்க்பட்டு வீடுகள் நிர்மாணிக்கபட்டு அக் கம்பணிகளால் விற்பனைக்கு விடப்படுகின்றன இத்திட்டத்தின் கீழ் 3 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என அங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் தெரிவித்தாா்.unnamed-3

Related posts

சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்றிய அமைச்சர் றிஷாட் தலைமையிலான அ.இ.ம.கா

wpengine

கைத்தொழில் பேட்டைகளை அமைத்து,உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும்

wpengine

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிசாத்துடன் சந்திப்பு.

wpengine