உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

2025-ஆம் ஆண்டு ஆசியாவின் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் – முதலிடத்தில் இந்தியர்!

ஆசியா, உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாக திகழ்கிறது. சிறந்த நகரங்கள், முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையால் இந்த கண்டம் பல பணக்காரர்களை உருவாக்கியுள்ளது.

2025-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஆனால் இந்தியா மற்றும் ஹொங்ஹொங் மூலமும் சில முக்கிய தொழிலதிபர்கள் இடம் பிடித்துள்ளனர்.

2024-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பில்லியனர்களின் சொத்து மதிப்புகள் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளன.

இந்தோனேசியாவின் பிரஜோகோ பங்கெஸ்து மற்றும் இந்தியாவின் சவித்ரி ஜிந்தால் ஆகியோர் இந்த வருட பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தியாவின் முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர்) 2025-ஆம் ஆண்டின் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதலிடம் பிடித்துள்ளார்.

ஹொங்ஹொங் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள் மிகப்பெரிய வளர்ச்சியுடன் பட்டியலில் இணைந்துள்ளனர்.

  1. முகேஷ் அம்பானி (இந்தியா) – $86.9 பில்லியன்
    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர்.

உலகளாவிய ரீதியில் 18வது இடத்தில் உள்ளார்.

  1. ஜோங் ஷான்ஷான் (சீனா) – $56.0 பில்லியன்
    நாங்ஃபூ ஸ்பிரிங் மற்றும் பயோலாஜிகல் பார்்மசி என்டர்பிரைஸ் நிறுவனங்களின் உரிமையாளர். சீனாவின் பணக்காரர்களில் முதலிடம்.
  2. கவுதம் அதானி (இந்தியா) – $54.7 பில்லியன்
    அதானி குழுமத்தின் தலைவர். போக்குவரத்து, பசுமை ஆற்றல், துறைமுகம் மற்றும் உற்பத்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
  3. மா ஹூடெங் (சீனா) – $53.3 பில்லியன்
    டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்.
  4. ஜாங் யிமிங் (சீனா) – $45.6 பில்லியன்
    TikTok மற்றும் பேயிடான்ஸ் நிறுவனங்களை உருவாக்கியவர்.
  5. தடாஷி யனை & குடும்பம் (ஜப்பான்) – $45.1 பில்லியன்
    ஃபாஸ்ட் ரீடெய்லிங் குழுமத்தின் தலைவர். ஜப்பானில் ஒரே பணக்காரர்.
  6. லெய் ஜுன் (சீனா) – $42.6 பில்லியன்
    Xiaomi நிறுவனத்தை நிறுவியவர்.
  7. காலின் ஹுஆங் (சீனா) – $40.0 பில்லியன்
    PDD ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்.
  8. லீ கா-ஷிங் (ஹொங்ஹொங்) – $38.3 பில்லியன்
    CK ஹட்சிசன் குழுமத்தின் தலைவர்.
  9. ராபின் செங் (ஹொங்ஹொங்) – $37.6 பில்லியன்
    CATL – எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தியாளரின் தலைவர்.

மொத்தம் 10 பேரில் 5 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், இதன் மூலம் சீனா ஆசியாவின் முதலீட்டு வளர்ச்சியில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா இரண்டு இடங்களைப் பிடித்து, வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் முன்னணியாக உள்ளது. ஹாங்காங் மற்றும் ஜப்பான் தலா ஒரு இடம் பெற்றுள்ளன.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

மலேசியாவின் 7 ஆவது பிரதமராக 92 வயதான மஹதிர் முஹம்மட்

wpengine

அம்பானி மகளா ? பிரில்லா மகளா ? காஸ்மெடிக்ஸ் வியாபாரம், விளம்பரம் முந்தபோறது யார் ?

Maash

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல்வராக மெகபூபா

wpengine